Ticker

6/recent/ticker-posts

நாட்டை முடக்கி வைக்க முடியாது ஜனாதிபதி மற்றும் பெசில் ராஜபக்ஷ திட்டம்


இலங்கை முழுவதும் ஊரடங்கை பிறப்பிக்குமாறு அதிகாரிகள் விடுத்த வேண்டுகோளை மிகவும் கஷ்டப்பட்டு நிராகரித்ததாக பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

பெரும்பாலானவர்கள் நாடளாவிய ரீதியில் ஊரடங்கை நடைமுறை படுத்த வேண்டும் முழுமையான முடக்கலை   அறிவிக்க வேண்டும் என்ற கருத்தினை வெளியிட்டிருந்தனர். 

மிகவும் கஷ்டப்பட்டு அதனை நிராகரித்து மேல் மாகாணத்துடன் மட்டுப்படுத்தினோம் என்று பெசில் ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார்

சுகாதார அதிகாரிகள் 10 நாட்களுக்காவது நாட்டின் அனைத்து செயற்பாடுகளையும்  நிறுத்த வேண்டும் என்ற கருத்தினை கொண்டுள்ளார்கள் கம்பஹா மாவட்டம் 1 மாத காலமாக முடக்கல் நிலையில் உள்ளது.

மக்கள் பெரும் துயரை அனுபவிக்கின்றனர். 

  அத்துடன் பழுதடைந்த பொருற்களை விற்பனை செய்பவர்களை உடனடியாக தமது வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டாம் என பெசில் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார் 

 இதேவேளை நாட்டை ஒருபோதும் முழுமையாக முடக்கி வைக்க முடியாது என்று ஜனாதிபதி கோட்டபே ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். 

சுகாதார நடைமுறைகளுடன் மக்கள் இயல்பு வாழ்க்கையை தொடங்க தயாராக வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன் போது கூறியுள்ளார். 

ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது

Post a Comment

0 Comments