பாடசாலைகள் ஆரம்பிப்பது தாமதமாவதால் நாட்டில் ஏற்பட்டுள்ள அபாயகரமான நிலைமையை கருத்தில் கொண்டு கற்றல் நடவடிக்கைகளை வீட்டில் இருந்து மேற்கொள்ளுமாறும் எந்த காரணம் கொண்டும் வெளிப்பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் மாணவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது
இதன் தொடர்பில் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகள் ஆரம்பிப்பது தாமதமாவதால் நாட்டில் ஏற்பட்டுள்ள அபாயகரமான நிலைமையை கருத்தில் கொண்டு கற்றல் நடவடிக்கைகளை வீட்டில் இருந்தே மேற்கொள்ளுங்கள்.
வெளியில் செல்லும் போது முகக்கவசம் இல்லாமல் பல மாணவர்கள் வெளியில் நடமாடுவது அவதானிக்கப்பட்டுள்ளது.
அது ஆபத்தானது என்றும் கல்வித்திணைக்களமும் பாடசாலைகலும் வழிப்படுத்தும் இணைய வழியிலும் தொலைகாட்சி ஊடாகவும் நடைபெறுகின்ற கல்வி செயற்பாடுகளில் இணைந்திருங்கள்.
தாய் தந்தைகளுக்கு அசௌகரியங்கள் கொடுக்காமல் உங்கள் பாடசாலை அதிபர் ஆசிரியர்களோடு தொடர்ப்பினை பேணி பாட ரீதியிலான தலைப்பை பெற்றுக்கொள்ளுங்கள்.
மேலும் இந்த வருடங்கள் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் பரீட்சைக்கு ஆயத்தமாக வேண்டும் என்று இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் மாணவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
0 Comments