இலங்கையில் இதுவரை 12570 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் 383 பேர் புதிதாக இனங்கனப்பட்டதை அடுத்து இந்த தொகை அதிகரித்துள்ளது
அவர்களுடன் 168 பேர் கொழும்பு மாவட்டத்தையும் 157 பேர் கம்பஹா மாவட்டத்தையும் சேர்த்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் மினுவாங்கொட கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 9096 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களில் 1041 பேர் ஆடை கைத்தொழிற்சாலை ஊழியர்கள் என்பதுடன் ஏனைய 7048 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் 6623 பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் 5918 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்
கடந்த வாரத்தில் மாத்திரம் 16 பேர் உயிரிழந்துள்ளதாக வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது
0 Comments