Ticker

6/recent/ticker-posts

திருமண நிகழ்வுகள் நடத்துவது குறித்து புதிதாக வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்



 

யாழ் மாவட்டத்தின் தற்போதைய  புதிய கொரோனா நிலைமைகளின் தொடர்பில்  ஆராயும் மாவட்ட கொரோனா செயலணியின் விசேட கூட்டமொன்று யாழ் மாவட்ட செயலணியில் இடம் பெற்றது 

குறித்த கூட்டத்தில திருமணங்களை வீட்டில் நடத்த வேண்டும் எனவும் 50 பேருக்கு மேற்படாதவாறு நபர்கள் கலந்து கொள்ளவேண்டும் எனவும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது. 

மரண சடங்குகளில் 25 பேர் மாத்திரமே அனுமதிக்கப்பட வேண்டும் எனவும்  வெளி மாவட்டங்களில் இருந்து மக்கள் வருவது தவிர்த்துக்கொள்ளப்பட வேண்டும் எனவும் மேலும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு தனியார் கல்வி நிறுவனங்கள் இயங்க  தடை விதிக்கப்பட்டுள்ள அதே வேலை திறந்த சந்தைகளுக்கு அனுமதி இல்லை எனவும் தீர்மனம் எடுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு போட்டிகளை ஒத்திவைத்தல்,  மக்கள் கூட்டங்கள் மற்றும் பொது நிகழ்வுகளை ஒத்திவைத்தல் போன்ற முடிவுகள் குறித்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments