நாடு முழுவதும் சுமார் 67000 பேர் சுய தனிமைப்படுத்தளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடக பேச்சாளர் பிரதி போலீஸ்மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். இவர்கள் 25000 குடும்பங்களை சேர்த்தவர்கள் என்பதுடன் அதிகளவான குடும்பங்கள் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் கம்பஹா மாவட்டத்தில் 8747 பேரும் கொழும்பு மாவட்டத்தில் 5500 பேரும் சுய தனிமைப்படுத்தலுக்கி உற்படுத்தப்பட்டுள்ளனர்.
சுயமாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை சுகாதார அதிகாரிகள் மற்றும் போலீசார் தொடர்ந்தும் கண்காணித்து வருகின்றனர்.
சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் இருந்து எவராலும் வெளியேறினலோ வீட்டுக்கு வந்தாலோ குற்றம் இப்படியான சந்தர்ப்பங்களில்அதற்கு எதிராக நோய் தடுப்பு கட்டளை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.
0 Comments