5000 ருபாய் நிவாரணம் வழங்கும் திட்டத்தின் 2ஆம் கட்ட நடவடிக்கைகள் ஆரம்பம்.
இலங்கையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள 5000 ரூபாய் வழங்கும் திட்டத்தில் 2ஆம் கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.அதன்படி குறித்த நடவடிக்கைகளை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்குமாறு அமைச்சர் பிரசுங் ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி கம்பஹா மாவட்டத்தில் 464, 254குடும்பங்களுக்கு 5000 ருபாய் வழங்கவுள்ளதாகவும் இதற்கு அரசாங்கத்தால் ஒரு தொகை பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள covid 19 பரவல் காரணமாக நாட்டில் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுஇவ்வாறான நிலையில் இவ்வாறு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுக்கும் மக்களுக்கு 5000 ருபாய் நிவாரணம் வழங்கப்படவுள்ளது
0 Comments