Ticker

6/recent/ticker-posts

முகக்கவசம் தொடர்பில் வைத்தியர்கள் தெரிவித்துள்ள முக்கிய அறிவிப்பு


 முகக்கவசம் தொடர்பில் வைத்தியர்கள் தெரிவித்துள்ள முக்கிய அறிவிப்பு :


முகக்கவசங்களை அதிக பட்ஷன் 4 மணித்தியாலங்களே மாத்திரமே பயன் படுத்த வேண்டும் என்று   சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பொது சுகாதார  சிறப்பு மருத்துவர்  உத்பால அமரசிங்க தெரிவித்துள்ளார். 

 5 மணித்தியாலங்கள் பயன் படுத்திய பின்னர் அகற்றப்படும் முகக்கவசத்தை பாதுகாப்பாக அகற்றி குப்பை தொட்டியில் போடவும் 


பின்னர் புது முகக்கவசம் ஒன்றை அணிந்து கொள்ள வேண்டும். 

 வெளிக்கு செல்வோர் அத்தியாவசிய தேவைக்கு வெளியில் செல்வோர் இந்த நடைமுறையை அத்தியாவசியமாக பின்பற்ற வேண்டும். 


4 மணி நேரத்தின் பின்னர் அகற்றி முகக்கவசத்தை குப்பைத்தொட்டியில் போடுங்கள். 

அங்கங்கே போட  வேண்டாம்.  

இதனூடாக இந்த கொரோனா வைரஸ் பரவக்கூடும். 


முகக்கவசம் அணியும் போது  வாய் மற்றும் மூக்கு முழுமையாக மூடும் வகையில் அணிவது கட்டாயமாகும். 


முகக்கவசத்தை சரியான விதத்தில் பயன் படுத்தவில்லை என்றால் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவரிடம் இருந்து 

இன்னொருவருக்கு நோய் தொற்று பரவ  ஆபத்துள்ளது.


நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதென்றால்  மேலதிகமாக 2 முகக்கவசங்கள் கொண்டு செல்வது கட்டாயமாகும். 


  அது உங்கள் சுகாதார பாதுகாப்பிற்கு நல்லது என அவர் மேலும் தேரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments