Covid அச்சம் : பொது மக்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார் அஜித் ரோஹன
தனிமை படுத்தல் விதி முறைகளை மீறி செயற்படும் பொதுமக்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அச்சுறுத்தலான சூழ்நிலை நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளமையினால் தனிமை படுத்தல் சட்ட விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் குறித்த தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி பெரும்பாலானோர் செயற்படுவதாக தெறிவிக்கப்படுகின்றது.
இந்நிலையிலே அஜித் ரோஹன இவ்வாறு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பான அவர் மேலும் கூறுகையில் கடந்த தினங்களில் பொது போக்குவரத்தில் உரிய முறையில் தனிமைப்படுத்தல் ஒழுங்கு விதிகள் பின்பற்றப்படவில்லை .
மேலும் பொது இடங்களிலும் தனிமை படுத்தல் ஒழுங்கு விதிகளை மக்கள் பின்பற்றாத நிலை அவதானிக்க கூடியதாகவுள்ளது
பொதுமக்கள் தொடர்ந்தும் இவ்வாறு செயற்படுவார்களானால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
0 Comments