எதிர்வரும் 9ஆம் திகதி பாடசாலைகளை மீண்டும் திறக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இதற்கான சுகாதார வழிகாட்டுதலை எழுத்து மூலம் வழங்குமாறு சுகாதார அமைச்சிடம் கூறியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடலாவிய ரீதியில் பல கொரோனா தோற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
எனினும் இணையத்தளம் வழியாக மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எவ்வாறாயினும் சிலருக்கு இணைய வசதியின்மை கருத்தில் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10000 தை கடந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
0 Comments