Ticker

6/recent/ticker-posts

2019 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கான வெட்டுப் புள்ளி தயாரிக்கும் பணி முடிவு பெற்றது

2019 ஆம் ஆண்டில் ஓகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற  க.பொ.த உயர்தர பரீட்சைகளுக்கான  வெட்டுப் புள்ளிகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதால். அதற்கு மாணவர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்

எனவே தற்போது  உயர்தர பரீட்சைக்கான வெட்டுப் புள்ளி தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இருப்பினும் தயாரித்த வெட்டுப் புள்ளிகளை வெளியிடுவதற்கான எந்தவொரு தீர்மானமும்  எடுக்கப்படவில்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணை குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

தற்போது க.பொ.த உயர்தர பரீட்சைகள் இடம்பெற்று வருவதால் வெட்டுப் புள்ளிகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

மேலும் தற்போதைய  கொரோனா அச்சுறுத்தல் நிலைமை காரணமாகவே வெட்டுப் புள்ளிகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments