இலங்கையில் கொரோனா வைரசின் தாக்கத்தின் நிலைமை 3ஆம் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.ஒரு கட்டத்துக்கு மேல் கொரோனா தொற்றின் தன்மை மாறி வருவதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது இலங்கையில் கொரோனா தாக்கம் 3ம் காட்ட எச்சரிக்கை நிலையில் உள்ளது என்றும் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
இந்த நிலையில் ஊரடங்கு சட்டம் அமுலில் இல்லாத பகுதியில் செயற்பாடுகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து சுகாதார அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய நிலை 3 ம் கட்ட ஆபத்தான நிலை என கருதப்படுகிறது.
இதன் படி வீட்டிலிருந்து வெளியேற 2 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும்.
பஸ் மற்றும் புகையிரதம் போன்ற பொது போக்குவரத்து இருக்கைகள் 100 க்கு 75 சதவீதம் வரை அனுமதிக்கப்படுகின்றனஅரச மற்றும் தனியார் துறை, அலுவலகங்களில் குறைந்த பட்ச ஊழியர்களுடன் பணியாற்ற வேண்டும்.
சூப்பர் மார்க்கட் மற்றும் விற்பனை நிலையங்களில் 50 % வாடிக்கையாளர்களையே அனுமதிக்க வேண்டும்.
பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் கல்வி வகுப்புக்கள் மூடப்பட வேண்டும்.
0 Comments