இலங்கையில் 22 ஆவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு அறிவித்துள்ளது.
27 வயதுடைய பாணதுரையை சேர்த்த இவர் 31ஆம் திகதி பாணந்துறை வைத்தியசாலையில் தற்கொலைக்கு முயன்றுள்ள நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்கொலை முயற்சி காரணமாக அதற்கு சிகிச்சை அளித்த போது சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்துள்ளார்.
தற்கொலை முயற்சியால் இந்த நபர் உயிரிழந்தாலும் அவருக்கு மேற்கொண்ட PCR பரிசோதனையில் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேலும் மேற்கொண்ட விசாரணையின் போது இந்த நபர் போதை பொருளுக்கு அடிமையானவர் என தெரிய வந்துள்ளது
இந்த விடயம் குறித்து தொற்று நோய் விஞ்ஞான பிரிவினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments