Ticker

6/recent/ticker-posts

அல்லாஹ்விடம் மறுக்கப்படாத துஆ அங்கிகரிக்கப்படும் சரியான நேரம் இது

 

♡.. துஆ அங்கீகரிக்கப்படும் நேரங்கள் ..♡

 🔘...ஒரு அடியான் தன் இறைவனுக்கு மிக நெருக்கமாக இருப் பது ஸஜ்தாவின்போதுதான் . 

எனவே அதில் துஆவை அதி கப்படுத்துங்கள் என்பது நபிமொழி . 

_அறிவிப்பவர் : அபூஹுரைரா ( ரழி )

_நூல் : முஸ்லீம் 

🔘...பாங்கு  இகாமத்திற்கிடையில் கேட்கப்படும் துஆ மறுக்கப் படமாட்டாது . ( நபிமொழி ) 

 _அறிவிப்பவர் : அனஸ் ( ரழி )

_நூல் : தீர்மிதி , 

🔘... இரண்டு துஆக்கள் நிராகரிக்கப்பட மாட்டாது அல்லது நிரா கரிக்கப்படுவதென்பது மிகக் குறைவு . அவை பாங்கின் போதும் , சிலர் சிலரிடம் மோதும் போர்க்களத்தின்போதும் கேட்க்கப்படும் துஆக்களாகும் .

 ( நபிமொழி ) 

_அறிவிப்பவர் : ஸஹ்ல் பின் ஸஃத் ( ரழி )  _நூல் : அபூதாவுத் 

🔘...  இரவை முன்றாகப் பிரித்து கடைசிப் பகுதியில் இறைவன் முதல் வானத்துக்கு தினமும் இறங்குகிறான் .

 என்னிடம் பிரார்த்திப்பவர் உண்டா ? அவரது பிரார்த்தனையை நான் ஏற்கிறேன் .

 என்னிடம் கேட்பவர் உண்டா ? நான் அவருக் குக் கொடுக்கிறேன் .

 என்னிடம் பாவமன்னிப்பத் தேடுபவர் உண்டா ? நான் அவருக்கு மன்னிக்கிறேன் என்று கூறுகி றான் . ( நபிமொழி ) 

_அறிவிப்பவர் : அபூஹுரைரா ( ரழி ) 

_நூல் : முஸ்லிம் 

🔘... ஒவ்வொரு இரவிலும் ஒரு நேரம் இருக்கிறது அந்நேரத்தை ஒரு முஸ்லிம் இவ்வுலக , மறு உலக நன்மையை இறை வனிடம் பிரார்த்தித்தவாறு அடைந்தால் இறைவன் அவ னுக்கு அதை வழங்காமல் இருக்கமாட்டான் . ( நபிமொழி ) 

_அறிவிப்பவர் : ஜாபிர் ( ரழி ) 

_நூல் : முஸ்லிம் 

✅ பயன்கள் : 

1. ஏனைய நேரங்களை விட பிரார்த்தனை அங்கீகரிக்கப்படு வதை அதிகம் எதிர்பார்க்கக்கூடிய சில நேரங்கள் இருக் கின்றன . 

2. இந்நேரங்களைப் பேணி இதில் அதிகமதிகம் பிரார்த்தனை செய்வதற்கு ஆர்வமூட்டப்பட்டுள்ளது .

3. ஸஜ்தாவின்போது , பாங்கு இகாமத்துக்கிடையில் , இரவின் கடைசி நேரம் , போர்க்களத்தில் எதிரிகளைச் சந்திக்கும் போது ஆகியவை இந்த நேரங்களைச் சார்ந்தனவாகும் .


                           [ The amazing media ]

                              Ris Ras creation ❤


 

Post a Comment

0 Comments