_ பொய்ச்சத்தியம் _
🤎... இப்னு மஸ்வூத் ( ரழி ) அறிவிக்கிறார்கள் : ஒரு முஸ்லிமீன் பொருளை அபகரிப்பதற்காக யாரேனும் பொய்ச் சத்தியம் செய்தால் அல்லாஹ் அவன் மீது கோபம் கொண்ட நிலை யில் அல்லாஹ்வை அவன் சந்திப்பான் என்று நபி ( ஸல் ) அவர்கள் கூறிவிட்டு இதுபற்றி வந்துள்ள திருக்குர்ஆனின் ' எவர்கள் அல்லாஹ்வுடன் செய்து கொண்ட உடன்படிக் கையையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்று விடுகின்றார்களோ அவர்களுக்கு மறுமையில் எவ்வித நற் பேறுமில்லை .
இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ் அவர்க ளிடம் பேசவும் மாட்டான் அவர்களைப் பார்க்கவும் மாட் டான் .
அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான் .
மா றாக அவர்களுக்கு துன்புறுத்தும் தண்டனைதானிருக்கின் றது ' ( 3:77 ) என்ற வசனத்தை ஓதிக்காட்டினார்கள்
நூல் : புகாரி ( 6459 ) , முஸ்லிம் , திர்மிதி ( 1297 )
யார் பொய் சத்தியத்தின் மூலம் ஒரு முஸ்லிமுடைய உரிமை யை பறித்துக் கொள்கிறாரோ அல்லாஹ் அவருக்கு நரகத் தை கடமையாக்கிவிடுகின்றான் .
சொர்க்கத்தை ஹராமாக் கிவிடுகின்றான் என்று நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் .
அப் போது ஒரு மனிதர் , அல்லாஹ்வின் தூதரே ! மிகச்சிறிய பொருளானாலுமா ? என்று கேட்க , அராக் மரத்தினுடைய ( பல்துலக்கும் சிறு குச்சியானாலும் சரியே ! என நபி ( ஸல் ) கூறினர் .
அறிவிப்பவர் : அபூஸலமா ( ரழி ) நூல் : முஸ்லிம் .
அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும் , பெற்றோரைத் தொல்லை ப்படுத்துவதும் , உயிர்களைக் கொல்வதும் , பொய் சத் தியம் செய்வதும் பெரும்பாவங்களாகும் .
நபிமொழி . அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு ( ரழி ) புகாரி ( 6475 )
Ris Ras Creation.. ❤
0 Comments