பகிரங்க அறிக்கை இட்டு முட்டுமோதும் அமெரிக்காவும் சீனாவும் - இலங்கைக்கு கடும் நெருக்கடி
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான அதிகார போட்டியினால் இலங்கைக்கு பெரும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ கொழும்பிற்கு வந்து சேர்த்துள்ளார்.
மைக் பொம்பியோ கொழும்பிற்கு வரும் பொழுது நேற்று முன்தினம் அதுகுறித்து கொழும்பிலுள்ள சீனத்தூதரகம் வெளியிட்டுள்ள பகிரங்க அறிக்கையில் இலங்கைக்கு தேவையற்ற பிரச்சினைகளை கொண்டு வர வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவின் இந்த அறிக்கையானது அமெரிக்காவை சீண்டுவதுடன் அதிகாரப்போக்கை வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருந்தது.
எனினும் அமெரிக்க அரசும் தனது ஆசியப்பார்வையை இறுக்கிக்கொள்ளவதாகவே அமைந்ததாகவே தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில் அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட பொம்பியோ சீனா கொம்யூனிஸ கட்சி தான் நிஜத்தில் பெரும் அச்சுறுத்தல்
சர்வதேச அரங்கில் மற்றைய நாடுகள் எவ்வாறு ஈடுபாடு காட்ட வேண்டும் என நாம் கூறுகின்றோமோ அதே மாதிரி தான் சீனாவும் செயற்பட வேண்டும் என கூறுகின்றோம் என தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவு செய்திருந்தார்.
இதே வேலை இலங்கையை தலமாக அமெரிக்க சீனா கருத்து மோதல் பகிரங்க வெளிப்பாடாக வெடித்திருக்கின்றமை கொழும்பிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்துவதாக அமையக்கூடும் என சுட்டிக்காட்டப்படுகின்றது.
எவ்வாறாயினும் அமெரிக்காவின் அணுகுமுறையை இலங்கை அரசியல் வாதிகள் கடுமையாக சாடி வருவதுடன் இலங்கையுடன் பல்வேறு ஒப்பந்தங்களை செய்யவதற்காகவே அமெரிக்க இராஜாங்க செயலாளர் இலங்கைக்கு வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதே வேலை சீனாவும் கடும் மூழ்கல் நிலையில் பீஜீங்க்கு எதிராக கடும் வாசகங்கள் அடங்கியுள்ள குறிப்பு ஒன்றை வெளியிட்ட படி அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ கொழும்பிற்கு வந்து சேர்ந்துள்ளமையானது சவாலான விடயமாக கருதப்படுகிறது
0 Comments