வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு 2 வாரங்களுக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் உலர் உணவு பொருட்களை பொதி மூலமாக வழங்குவது தொடர்பாக பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி பணிக்குழு கவனம் செலுத்தியுள்ளது.
கடன் தவணைகளுக்கு சலுகை காலம் வழங்குவது தொடர்பாக நேற்றைய தினம் கலந்துரையாடல் இடம் பெற்றது.
இதன் போது ஒரு வார காலம் முழுமையாக மூடப்பட்ட பகுதிகளுக்கு 5000 ரூபாய் வழங்க தீமானிக்கப்பட்டுள்ளது.
Covid 19 வைரஸ் மீண்டும் தோன்றியுள்ள இந்த நேரத்தில் அத்தியாவசிய சேவைகளை கடந்த காலத்தை போலவே திறமையாகவும் சரியான முறையில் தொடர்ச்சியாக பராமரிக்க வேண்டும் என்று பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் மின்சாரம் , நீர் விநியோகம், எரிபொருள், எரிவாயு, போக்குவரத்து, சுகாதாரம், அதிவேக வீதியில் வசிக்கும் மக்கள் உட்பட அணைத்து மக்களுக்கும் அத்தியாவசிய சேவைகளை சரியான முறையில் வழங்குமாறு சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு அவர் அறிவித்துள்ளார்.
முதியவர்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் பொதுமக்களின் உதவித்தொகை மாற்ற ஓய்வூதியங்களை அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்க அரச முகவர்கள் மற்றும் தபால் அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments